Enable Javscript for better performance
\\\"இரு நபர் விசாரணைக் குழு பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இரு நபர் விசாரணைக் குழு பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது'

    By dn  |   Published on : 31st July 2013 11:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு, பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    விசாரணைக் குழுவை அமைத்ததில் என்.சீனிவாசனுக்கு தொடர்பு இருப்பதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெüரவ உறுப்பினரான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இக்குற்றச்சாட்டு தொடர்பாக இரு நபர்கள் (நீதிபதிகள்) அடங்கிய விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்தது. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன். அதனால், விசாரணை முறையாக நடைபெறாது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து என்.சீனிவாசன் தாற்காலிகமாக விலகினார்.

    இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்தது. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பொதுநல மனு ஒன்றின் மீது மும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை செவ்வாய்க்கிழமை அளித்தது. அதில், இரு நபர் குழு இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    61 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: இரு நபர் குழு அமைக்கப்பட்டது, பிசிசிஐயின் செயல்பாட்டு விதிமுறைகளின் பிரிவு 6-க்கு எதிரானது.

    செயல்பாட்டு விதிமுறைகளின்படி, விசாரணைக் குழுவில் ஐபிஎல் நடத்தைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் இருப்பது கட்டாயம். ஆனால், விசாரணைக் குழுவில் ஐபிஎல் நடத்தைக் குழு உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைக் குழு ஒரே ஒருநாள் மட்டும், குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது. அந்த நாளே விசாரணையும் முடிக்கப்பட்டுள்ளது.

    மனுவில் தெரிவிக்கப்பட்டதுபோல் இந்தக் கட்டத்தில் புதிய விசாரணைக் குழுவை அமைக்கும் உரிமை நீதிமன்றத்துக்குக் கிடையாது. இது குறித்து பிசிசிஐதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai