Enable Javscript for better performance
ஜிம்பாப்வேயுக்கு எதிரான 4-வது ஆட்டம்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜிம்பாப்வேயுக்கு எதிரான 4-வது ஆட்டம்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

    Published on : 31st July 2013 11:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிம்பாப்வேயுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்தியா ஏற்கெனவே வென்று விட்டதால், 4-வது ஒருநாள் ஆட்டத்தில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது.

    இந்த ஆட்டம் புலவாயோ நகரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில், முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக சேதேஷ்வர் புஜாரா, பர்வீஸ் ரசூல், மொஹித் சர்மா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இவர்கள், இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் விளையாடாதவர்கள்.

    ரஹானே தொடக்கம்: இளம் வீரரான ரஹானே இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராகவும், புஜாரா நடுவரிசையிலும் களமிறக்கப்பட வாய்ப்புண்டு. ரவீந்திர ஜடேஜா அல்லது அமித் மிஸ்ராவுக்கு பதிலாக, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பர்வீஸ் ரசூலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    எனினும் மற்றொரு இளம் வீரரான மொஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே. மொஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது, கோலியின் கையிலே உள்ளது. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் மொஹித் சர்மாவுக்கு அறிமுகப் போட்டியாக அமையும்.

    ஜிம்பாப்வே அணியைப் பொருத்த வரை, தொடரை இழந்தாலும் வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அணி வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    அந்த அணியின் பேட்டிங் வலுவில்லாததுவே, தோல்விக்கு முக்கியக் காரணமாக உள்ளது. அணி வீரர்கள் மன அளவில் உறுதி இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் டெய்லர் கூறியுள்ளார். அந்த அணியின் சிகந்தர் ராஸா, சிகும்பரா மற்றும் வி சிபந்தா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்து வீச்சில் பி.வி. விதோரி மற்றும் பி உட்சயா நம்பிக்கை அளிக்கின்றனர்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, உலக சாம்பியனை ஒரு ஆட்டத்திலாவது வீழ்த்தி விடவேண்டும் என்ற உறுதியுடன் அந்த அணி வீரர்கள் அடுத்த ஆட்டங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

    போட்டி நடைபெறும் குயின்ஸ் விளையாட்டு மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. அதனால் முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்களைக் குவிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆட்டம் பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    வீரர்கள் விவரம்: இந்தியா: விராட் கோலி (கேப்டன்), சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, அம்பாடி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, பர்வீஸ் ரசூல், வினய் குமார், சமி அகமது, ஜெயதேவ் உனட்கட், அமித் மிஸ்ரா.

    ஜிம்பாப்வே: பிரண்டன் டெய்லர் (கேப்டன்), சிக்கந்தர் ராஸா, சதேரா, மைக்கல் சினெüயா, எல்டன் சிகும்பரா, கிரேம் கிரீமர், கைல் ஜார்விஸ், திமிசென் மருமா, ஹாமில்டன் மஸகட்சா, நட்சாய் எம்'ஷங்வா, முடோம்போட்ஸி, சிபாந்தா, உட்சயா, விதோரி, மால்கம் வெல்லர், சேன் வில்லியம்ஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai