Enable Javscript for better performance
தில்ஷான், சங்ககாரா கூட்டணியில் இலங்கை அபார வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தெரிவித்த நம்பிக்கையை இலங்கை வீரர்கள் பொய்யாக்கினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

    கொழும்புவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் தில்ஷான் 110 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்ககாரா 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வியைத் தழுவியது.

    அதிகபட்சமாக கேப்டன் டிவில்லியர்ஸ் 51 ரன்கள் எடுத்தார். இலங்கைத் தரப்பில் மெண்டிஸ் மற்றும் லக்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக தில்ஷானும், தொடர் நாயகனாக சங்ககாராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai