Enable Javscript for better performance
மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவிடம் ரஷியா படு தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவிடம் ரஷியா படு தோல்வி

    By dn  |   Published on : 31st July 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 10-1 என்ற கோல் கணக்கில் கத்துக்குட்டி அணியான ரஷியாவைத் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    ஜெர்மனியின் மோன்செங்க்லாபாக் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியும், நியூஸிலாந்து அணியிடம் வெற்றியும் பெற்றிருந்தது. இதனால், காலிறுதிக்கு முன்னேறுவதில் இந்திய

    அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    ரஷிய அணியுடன் அதிக கோல்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும். அதேசமயம், ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவாகவோ அல்லது நியூஸிலாந்து தோற்கவோ வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்று நிலை உருவானது.

    இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 10-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தியத் தரப்பில் வந்தனா 3 கோல்களையும், பூனம் ராணி மற்றும் ராணி ஆகியோர் தலா இரு கோல்களையும், ரிதுஷா குமனி ஆர்யா, மன்ஜித் கெüர் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். மற்றொரு கோல் ரஷிய வீராங்கனைகளால் அடிக்கப்பட்டது.

    இந்திய ரசிகர்கள் வேண்டியது போல், ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால், சி பிரிவில் 7 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், 6 புள்ளிகளுடன் இந்திய அணி 2-ம் இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு முன்னேறின.

    இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் டி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் வியாழக்கிழமை மோதவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai