Enable Javscript for better performance
வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் சோம்தேவ்!- Dinamani

சுடச்சுட

    

    வாஷிங்டன் ஓபன்: நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் சோம்தேவ்!

    By dn  |   Published on : 31st July 2013 11:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dev

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன்.

    வாஷிங்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் 2-வது சுற்றில் சோம்தேவ் 6-3, 7-6 (7/4) என்ற நேர் செட்களில் உக்ரைன் வீரர் அலெக்ஸாண்டர் டோல்காபோலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த ஆட்டத்தில் 9 ஏஸ் சர்வ்களை அடித்து உக்ரைன் வீரருக்கு கடும் நெருக்கடியை சோம்தேவ் ஏற்படுத்தினார்.

    இரண்டு செட்களிலும் தனது முதல் சர்வீஸிலேயே 50 சதவீதத்துக்கு மேல் சோம்தேவ் புள்ளியைப் பெற்றது அவருக்கு வெற்றியை எளிதில் கிட்டச் செய்தது.

    இந்த ஆட்டத்தில், ஒரே ஒருமுறை மட்டும் சோம்தேவ் இரண்டு சர்வீஸ்களையும் கோட்டை விட்டார். ஆனால், டோல்காபோலோவ் 8 முறை இத்தவறைச் செய்தார். இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறிய சோம்தேவ், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜான் ஐனெரை வியாழக்கிழமை சந்திக்க உள்ளார்.

    இந்த வெற்றி குறித்து சோம்தேவ் கூறுகையில், உக்ரைன் வீரர் திறமையானவர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடினேன். அவர் செய்த சில தவறுகள் எனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது. வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

    சோம்தேவ், தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, சீனாவில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai