Enable Javscript for better performance
விழிப்புடன் இருங்கள்! - லலித் மோடி எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    
    LalitModi

    பிசிசிஐ உறுப்பினர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள சீனிவாசனுக்கும், துணைத் தலைவர் அருண் ஜேட்லிக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிக்க வேண்டாம் என்றும் அவர்

    கேட்டுக் கொண்டார்.

    ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரித்த பிசிசிஐயின் இரு நபர் குழுவை சட்டத்துக்கு புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு மோடி இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சீனிவாசனுக்கும், அருண் ஜேட்லிக்கும் பிசிசிஐ உறுப்பினர்கள் ஆதரவளிப்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு லலித் மோடி பதில் அளித்த பதிலில், "பிசிசிஐயின் தலைவராக அருண் ஜேட்லி வரமாட்டார்.

    அவர், சீனிவாசன் போன்றவர்களின் பின்னிலையிலே இருப்பார். அவ்வாறு இருக்கையில் சீனிவாசனுக்கு எதிராக அவர் எப்படி குரல் எழுப்ப முடியும்' என்று கேள்வெயிழுப்பியுள்ளார்.

    அடுத்த கூட்டத்தில் அவர்கள் எனக்கு வாழ்நாள் தடை ஏற்படுத்தி, ஊடகங்களின் கவனத்தை திசை திருப்ப முயல்வர். அனைவருக்கும் காலம் உண்டு. உண்மை ஒருநாள் வெளிவரும் என்று முழுமையாக நம்புகிறேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai