Enable Javscript for better performance
வெற்றியின் ரகசியத்தை இளம் வீரர்களுடன் பகிரக்கூடாது- Dinamani

சுடச்சுட

    
    kashyap

    இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியின்போது முன்னணி வீரர்கள், வெற்றிக்கான ரகசியத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று நட்சத்திர வீரர் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் முன்னணி வீரர்கள், விளையாட்டுத் தந்திரங்களை இளம் வீரர்களுக்கு கூறியிருக்கலாம். ஆனால், பாட்மிண்டன் போட்டியில் அவ்வாறு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் நட்சத்திர வீரர்களாகக் கருதப்படுபவர்களில் காஷ்யப்பும் ஒருவர். பெங்களூர் அணிக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து பெங்களூரில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

    கிரிக்கெட் விளையாட்டு என்பது, அணி வீரர்களின் விளையாட்டு. அணியின் வெற்றி, வீரர்களின் ஒருங்கிணைப்பில் உள்ளது. அங்கு, இளம் வீரர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை முன்னணி வீரர்கள் கூறியிருக்கலாம். ஆனால், பாட்மிண்டன் என்பது தனி நபர் விளையாட்டு. அதனால், முன்னணி வீரர் தங்களது அணியைச் சேர்ந்த பிற நாட்டு இளம் வீரர்களுடன் வெற்றி ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு பகிர்ந்து கொண்டால், வேறு போட்டிகளில் அவர்களுக்கு எதிராக தோற்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

    சீனாவைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர்கள், அவர்களது வெற்றியின் ரகசியங்களை வெளியில் தெரிவிப்பதில்லை. இதனாலேயே, அவர்கள் பாட்மிண்டனில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனினும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கு ஆட்டத்தின் நுட்பத்தையும், முன்னணி வீரர்களுக்கு எதிராக எப்படி செயல்

    படுவது என்பதையும் எடுத்துக் கூறுவேன் என்றும் அவர் கூறினார்.

    திறமையுள்ள இளம் வீரர்களைக் கண்டறிய பாட்மிண்டன் லீக் போட்டி உதவும். மேலும், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு நிலைத்தன்மையை இப்போட்டி ஏற்படுத்தும். இப்போட்டியினால், தரவரிசைப் பட்டியலில் எனது நிலை முன்னேறும் என்று நம்புகிறேன். சர்வதேச அளவில் முன்னணி வீரர்களுடன் விளையாடுவது, நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai