Enable Javscript for better performance
2014-ல் இந்திய கிராண்ட்ப்ரீ நீக்கம்- Dinamani

சுடச்சுட

    
    f1

    ஃபார்முலா1 (எஃப்1) கார் பந்தயத்தின் இந்திய கிராண்ட்ப்ரீ சுற்றானது, 2014-ம் ஆண்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் இப்போட்டி 2015-ம் ஆண்டிலிருந்து மார்ச் மாதத்தில் தொடரும்.

    இத்தகவலை, இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியை நடத்தும் ஜேபி விளையாட்டு சர்வதேச நிறுவனம் (ஜேபிஎஸ்ஐ) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

    இது குறித்து ஜேபிஎஸ்ஐ தலைவரும், செயல் இயக்குநருமான சமீர் கெüர் கூறுகையில், "அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்திய கிராண்ட்ப்ரீ நடைபெறுவது, பருவகாலத்துக்கு உகந்தது. மேலும், அப்போது பண்டிகைகளும் வருவதால் அது சிறந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், எஃப்1 நிர்வாகம் இந்திய கிராண்ட்ப்ரீயை மார்ச் மாதம் நடத்த விரும்பியது.

    எனவே 2015-ம் ஆண்டிலிருந்து இப்போட்டி மார்ச் மாதத்தில் நடைபெறும்' என்று தெரிவித்தார்.

    2014-ல் இந்திய கிராண்ட்ப்ரீயை நீக்குவது குறித்து எஃப்1 தலைவர் பெர்னீ எக்லெஸ்டோன் ஏற்கெனவே இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியானது 2015-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என்று ஜேபிஎஸ்ஐ செய்தித் தொடர்பாளர் அஸ்கரி ஜெய்தய் கூறினார். பெர்னீ எக்லெஸ்டோனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    2014-ம் ஆண்டு இந்திய கிராண்ட்ப்ரீ அக்டோபர் மாதம் நடத்தப்பட்டால், 2015, மார்ச் மாதத்தில் (குறுகிய கால இடைவெளியில்) அடுத்த போட்டியை நடத்துவது கடினம். இதைக் கருத்தில் கொண்டே 2014-ம் ஆண்டுக்கான இந்திய கிராண்ட்ப்ரீ நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    2015-ம் எஃப்1 கார் பந்தயத்தில், ஆஸ்திரேலிய, மலேசிய கிராண்ட்ப்ரீகளுக்குப் பின்னர் இந்திய கிராண்ட்ப்ரீ நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai