சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: பிரதான சுற்றுக்கு சாய், துளசி தகுதி

சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றுக்கு இந்தியாவின்
சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: பிரதான சுற்றுக்கு சாய், துளசி தகுதி

சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றுக்கு இந்தியாவின் சாய் பிரணீத், பி.சி.துளசி மற்றும் அருந்ததி பட்னவனே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்போட்டிகள் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி. சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஆடவர் பிரிவில் காஷ்யப், ஆனந்த் பவார், அஜய் ஜெய்ராம், குருசாய் தத் மற்றும் செüரவ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதேபோல் இரட்டையர் பிரிவிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் விளையாட உள்ளனர்.

தகுதிச்சுற்று: இப்போட்டியின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆடவர் பிரிவில் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில், சாய் பிரணீத் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் முன்னாள் ஆல் இங்கிலாந்து சாம்பியன் முகமது ஹஃபீûஸத் தோற்கடித்தார். இவர், தனது 2-வது தகுதிச்சுற்றுப்போட்டியில் ரிச்சி டேக்ஷிடாவை 21-12, 21-20 என்ற கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

ஹைதராபாதைச் சேர்ந்த இவர், தனது முதல் சுற்றில் சர்வதேசத் தரவரிசையில் 4-ஆம் இடத்தில் உள்ள ஹாங்காங்கின் யுன் ஹுவை சந்திக்கிறார். இப்போட்டியின் ஆடவர் முதல் சுற்று ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

மகளிர் தகுதிச்சுற்றுப் போட்டியில் அருந்ததி பட்னவனே,  ரஷிய வீராங்கனை அன்னா அஸ்ட்ராகான்ட்செவாவை 21-5, 21-10 என்ற கணக்கிலும், சிங்கப்பூரின் லியாங்கை 21-14, 21-16 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர், தனது முதல் சுற்றில் பல்கேரிய வீராங்கனை பெட்யா நடெல்சீவாவை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் துளசி கடும் போராட்டத்துக்குப் பின், பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றார். இவர் தனது முதல் சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் லிந்த்வேனி ஃபேனிட்ரியை எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com