சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் இறுதி டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
சானியா முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். அதேநேரத்தில், காரா பிளாக் 11-வது முறையாக இதில் பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டிக்குத் தகுதிபெற்றது குறித்து சானியா கூறுகையில், "டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றதில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக மோத இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இந்த சீசனில் இதுவரை சிறந்த வெற்றிகள் கிடைத்துள்ளன. சிங்கப்பூரிலும் அது நீடிக்கும் என நம்புகிறேன்' என்றார்.