சுடச்சுட

  

  கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற ஃபார்முலா எல்ஜிபி 4 கார் பந்தயத்தில் கேரள வீரர் தில்ஜித் முதலிடம் பெற்றார்.

  கோவை செட்டிபாளையம் கரிவரதன் மோட்டார் ஸ்பீடுவேயில் ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் 17-ஆவது மோட்டார் பந்தயம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் 18 பேர் பங்கேற்றனர்.

  மொத்தம் 15 சுற்றுகள் கொண்ட இப்பந்தயத்தில் தொடக்கம் முதல் டார்க் டான் ரேசிங் குழுவைச் சேர்ந்த கேரளத்தின் தில்ஜித் முன்னிலை வகித்தார். 15 சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், போட்டி தூரத்தை 18:38:073 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்றார்.

  இதேபோல 15 சுற்றுகளிலும் இரண்டாமிடத்தில் வந்த டார்க் டான் ரேசிங் குழுவைச் சேர்ந்த கர்நாடக வீரர் சுதர்சனராவ் கர்வால், 18:45:147 நிமிடங்களில் கடந்து  இரண்டாமிடம் பெற்றார்.

  மெகோ ரேசிங் குழுவைச் சேர்ந்த தமிழக வீரர் சித்தேஷ் எஸ் மண்டோடி 12 சுற்றுகள் வரை மூன்றாமிடத்தில் வந்தார். காரில் ஏற்பட்ட பழுது காரணமாக 13-ஆவது சுற்றில் ராயோ ரேசிங் குழுவைச் சேர்ந்த மகாராஷ்டிர வீரர் அமேயா பாப்னா மூன்றாமிடத்துக்கு வந்தார். ஆனால் அடுத்த இரு சுற்றுகளிலும் அவரால் மூன்றாமிடத்தில் தொடர முடியவில்லை.

  14 மற்றும் 15-ஆவது சுற்றுகளில் மெகோ ரேசிங் குழுவைச் சேர்ந்த தமிழக வீரர் ராகுல் ரங்கசாமி 18:55:203 நிமிடங்களில் தூரத்தைக் கடந்து மூன்றாமிடம் பெற்றார்.

  வோல்க்ஸ்வாகன் போலோ ஆர் கப்: இக்கோப்பைக்கான போட்டியின் முதல் சுற்றில் இருமுறை விபத்து நடந்தது. இதனால் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

  போட்டியின் முடிவில் அங்கத் சிங் மத்தாரூ, 15 சுற்றுகளை 19:27:254 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், அன்சுல் மனோஜ் 19:29:572 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், லீ கேசவ் குப்தா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai