சுடச்சுட

  

  உலக கோப்பை ஹாக்கி: கடைசி நிமிடத்தில் வீழ்ந்தது இந்தியா

  By dn  |   Published on : 01st June 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  HOCK

  உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் பெல்ஜியத்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பின்கள வீரர்கள் கடைசி 15 வினாடிகள் சுதாரிப்புடன் இருக்கத் தவறினர். இதனால் பெல்ஜியம் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து 3-2 என முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.

  நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உலகக் கோப்பை ஹாக்கி நடைபெற்று வருகிறது. இதில் சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், பெல்ஜியமும் மோதின.

  பெல்ஜியத்தின் வேன் அபெல் ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முற்பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷத்துடன் ஆடினர். 44-வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. அடுத்த ஆறாவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்தார்.

  ஆனால், 55-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கெüகர்டு ஒரு கோல் அடிக்க 2-2 என ஆட்டம் சமநிலை அடைந்தது. பின் இரு அணிகளும் கோல் விழாமல் பார்த்துக் கொண்டன. இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெல்ஜியத்தில் டோமென் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பெல்ஜியம் 3-2 என வெற்றி பெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai