சுடச்சுட

  
  CUP

  ஏழாவது ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முதன்முறையாக கோப்பை வெல்லும் முயற்சியில் பஞ்சாப் அணியும், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கொல்கத்தா அணியும் முனையும் என்பதால் இறுதிச் சுற்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

  கடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியதால் இம்முறை ஐபிஎல் மீது அவப்பெயர் ஏற்பட்டு விடாமல் போட்டியை நடத்த வேண்டிய சூழல் நிலவியது. இதையெல்லாம் கடந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

  பஞ்சாப் முதலிடம்: இந்த தொடரின் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வரும் பஞ்சாப் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதிச் சுற்றில் 2-வது இடத்தில் இருந்த கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது. பின், சென்னையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்பை எளிதில் நழுவ விடாது என நம்பலாம்.

  மேக்ஸ்வெல் மீது ஒரு கண்: இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். எதிரணிகள் பிற வீரர்களை விட இவரையே அதிகம் குறி வைத்தன. விளைவு கடந்த நான்கு ஆட்டங்களில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் போன்ற உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே, மேக்ஸ்வெல் விரைவில் ஆட்டமிழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  சேவாக் விஸ்வரூபம்: எல்லோரும் மேக்ஸ்வெல் மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் சமயத்தில் எதிர்பாராத வகையில், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்து பிரமிக்க வைத்து விட்டார் சேவாக். அவரது இந்த

  ஃபார்ம் தொடருமானால், பஞ்சாப் மீண்டும் இமாலய இலக்கை எட்டலாம். மனன் வோரா, டேவிட் மில்லர், ஜார்ஜ் பெய்லி போன்றவர்களும் சமயத்துக்கேற்ப அதிரடி காட்டுவர். பந்து வீச்சைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சில் மிச்செல் ஜான்சன், சுழற்பந்தில் கரண்வீர் சிங், ஆக்ஷர் படேல் ஆகியோர் ஒத்துழைக்கலாம்.

  கொல்கத்தா: முதல் ஏழு ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்ததால் கொல்கத்தாவின் சகாப்தம் முடிந்து விட்டதாக இப்போட்டியின் நடுவில் கணிக்கப்பட்டது. ஆனால், தோல்விகளில் இருந்து மீண்டு வந்த கொல்கத்தா, சென்னையை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்தது. 22 பந்துகளில் 72 ரன்கள் விளாசி இந்த முன்னேற்றத்துக்கு காரணகர்த்தாவாக விளங்கினார் யூசுஃப் பதான். அவருடன் இந்த தொடரில் சராசரியாக ஏழு ஆட்டங்களில் 40 ரன்களுக்கும் மேல் குவித்து, அதிக ரன்கள் எடுத்துள்ள உத்தப்பா, அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கிறார். கேப்டன் கெüதம் கம்பீரும் நம்பிக்கை அளிக்கிறார். இவர்கள் தவிர்த்து ரியான் டென் டஸ்சடே, ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனும் பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai