சுடச்சுட

    
    nad

    களிமண் தரையின் நாயகனான ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடல், 3-வது சுற்றில் ஆர்ஜெண்டினாவின் லியானர்டோ மேயரை 6-2, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

    தொடர்ந்து 5-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள நடால், இந்த போட்டியில் 19 கேம்களை மட்டுமே இழந்துள்ளார். தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள லியானர்டோ, நடாலுக்கு கடும் சவால் அளித்தார். இருப்பினும் நடால் சுதாரித்து வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் செர்பியாவின் டுடன் லஜோவிச்சை நடால் எதிர்கொள்கிறார்.

    நடாலை வீழ்த்தும் யுக்தி குறித்து சக வீரரான ஜோகோவிச்சிடம் ஆலோசனை பெறுவீர்களா என்ற கேள்விக்கு லஜோவிச் "ஆமாம், நடாலை தோற்கடிக்க ஒவ்வொருவரிடமும் ஆலோசனை பெறுவேன்' என பதிலளித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான டேவிட் ஃபெரர், 6-2, 7-6(2), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஆண்ட்ரூஸ் செப்பியை வீழ்த்தினார். மற்றுமொரு ஸ்பெயின் வீரர் மார்செல் கிரனோலர்ஸூம் வெற்றி பெற்றார்.

    குவிட்டோவா அவுட்: மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் பெட்ரா குவிட்டோவாவும், தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவும் மோதிய ஆட்டத்தில் குவிட்டோவா தோல்வியடைந்தார். அதேபோல செர்பியாவைச் சேர்ந்த அனா இவானோவிச்சும், செக்குடியரசின் லூசி சஃபரோவாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    ருமேனியாவின் சிமோனா ஹலேப், செர்பியாவின் ஜெலினா ஜோன்கோவிச், இத்தாலியின் சாரா எர்ரானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    சானியா - காரா ஜோடி முன்னேற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் கனடாவின் கேப்ரிலா டப்ரோவ்ஸ்கி, போலந்தின் ஏலிக்ஜா ரோசல்ஸ்கா ஜோடியை தோற்கடித்தது. இதன் மூலம் சானியா - காரா பிளாக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai