Enable Javscript for better performance
பிரேசிலில் கால்பந்து போராளிகள்...- Dinamani

சுடச்சுட

  

  பிரேசிலில் கால்பந்து போராளிகள்...

  By ம.பண்டரிநாதன்  |   Published on : 01st June 2014 12:50 AM  |   அ+அ அ-   |    |  

  பிரெஞ்சு ஓபன், ஹாக்கி உலகக் கோப்பை ஆகிய போட்டித் தொடர்களை பின்னுக்குத் தள்ளி ரசிகர்களின் இணையத் தேடலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது வரும் 12ஆம் தேதி தொடங்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி.

  கடினமான தகுதிச்சுற்றுகளைக் கடந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவதே ஒவ்வொரு அணிகளின் லட்சியமாக இருக்கும். அப்படி இருப்பினும், இப்ராஹிமோவிச்சின் உக்ரைன், கேரத் பேலின் வேல்ஸ் ஆகிய நாடுகள் இப்போட்டியில் இடம் பெறவில்லை என்பது, தகுதிச்சுற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பிரதான சுற்றில் 32 அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் ஒவ்வொன்றுக்கும், போக்குவரத்து வசதிக்காக ஒவ்வொரு பேருந்து ஒதுக்கப்பட்டுள்ளன. வித்தியாசம் மட்டுமே ஒரு செயலை பரவலாக பேசவைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு பேருந்திலும் அணிகளை உற்சாகப்படுத்தும் வாசகம் இடம் பெற்றுள்ளது.

  இந்த வாசகங்கள் ரசிகர்களின் தேர்வாகும். இதற்காக போட்டி கூட வைக்கப்பட்டது.

  இது, சில அணிகளுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சில அணிகளுக்கு மிகவும் அதிகபட்ச உற்சாகத்தையும், சிலவற்றுக்கு நம்பிக்கை அளிக்கும் உற்சாகத்தையும் உண்டாக்குமாறு வாசகங்கள் அமைந்துள்ளதுவே அதற்கான காரணம்.

  ஆஸ்திரேலிய அணியின் ஸ்லோகம், "வரலாற்றை நோக்கி எங்கள் பயணம் என நம்புகிறோம்'. இது, களத்தில் உள்ள அனைத்து அணிகளும் வெற்றிக்காகத்தான் 90 நிமிடங்கள் ஓடுகின்றன. அவ்வாறு இருக்கும்போது, வெற்றி பெறுவோம் எனநம்புகிறோம் என்பன போன்ற வாசகங்கள் எதிர்மறையானவை என்று ஆஸி ரசிகர்கள் குரல் எழுப்பியுள்ளனர். ஆனால், ஆஸ்திரேலியா கால்பந்து சம்மேளனத்தின் தலைமை செயல் இயக்குநர் டேவிட் கேலோப், இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. "மற்ற அணிகளின் வாசகங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முன்னேறுங்கள்' என்று மட்டும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  சரி, அணிகளின் வாசகங்கள் எப்படி ஆர்வத்தை தூண்டுகிறது என்பதை பார்ப்போம்.

   

  * அல்ஜீரியா: பிரேசிலில் பாலைவனப் போராளிகள்

  * ஆர்ஜெண்டினா: நாங்கள் ஓர் அணி அல்ல; ஓர் நாடு

  * ஆஸ்திரேலியா: சாக்ரூஸ்: வரலாற்றை நோக்கி எங்கள் பயணம் என நம்புகிறோம்

  * பெல்ஜியம்: எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்

  * போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா: மனதிலும் டிராகன்; களத்திலும் டிராகன்

  * பிரேசில்: தயாராய் இரு; 6ஆவது கோப்பைக்கான நேரமிது

  * கேமரூன்: சிங்கம் எப்போதும் சிங்கம்தான்

  * சிலி: முன்னேறு சிலி, முன்னேறு!

  * கொலம்பியா: புறப்பட்டது அணி அல்ல, தேசம்

  * கோஸ்டா ரிகா: கால்பந்து எனது உணர்வு; என் மக்களே எனது பலம்; கோஸ்டா ரிகாவே எனது பெருமை

  * ஐவரி கோஸ்ட்: பிரேசிலை நோக்கி படையெடுத்துள்ள யானைகள்

  * குரோஷியா: எங்கள் மனதில் உள்ளது தீ; குரோஷியாவின் இலக்கு ஒன்றுதான்

  * ஈகுவேடார்: ஒரே இலக்கு; ஒரே ஆர்வம்; ஒரே இதயத்துடிப்பு; இதுதான் ஈகுவேடார்

  * இங்கிலாந்து: ஓர் அணியின் கனவு, லட்சக்கணக்கான மக்களின் இதயத் துடிப்பு

  * ஃபிரான்ஸ்: முடியாதது ஃபிரெஞ்சு வார்த்தையில் இல்லை

  * நெதர்லாந்து: உண்மையான வீரன் ஆரஞ்சு நிற உடை உடுத்துவான்

  * ஜெர்மனி: ஒரு நாடு; ஒரு அணி; ஒரு கனவு

  * கானா: கருப்பு நட்சத்திரங்கள்: பிரேசிலில் பிராகசிக்க உள்ளன

  * கிரேக்கம்: வீரர்கள் கிரேக்கர்களைப் போல் விளையாடுவர்

  * ஹோன்டுராஸ்: நாங்கள் ஒரே நாடு; ஒரே தேசம், எங்கள் மனதில் 5 நட்சத்திரங்கள்

  * ஈரான்: பெர்சியாவின் கெüரவம்

  * இத்தாலி: உலகக் கோப்பையை நீல நிறமாக்க தயாராகு

  * ஜப்பான்: சாமுராய், இது போருக்கான நேரம்

  * தென் கொரியா: அனுபவித்து ஆடுங்கள் வீரர்களே!

  * மெக்ஸிகோ: வெற்றி நமதே, எப்போதும் இணைந்திரு

  * நைஜீரியா: வெற்றி பெறத் தேவை ஒற்றுமை மட்டுமே

  * போர்ச்சுகல்: பழையது வரலாறு; புதியது சகாப்தம்

  * ரஷியா: யாரும் எங்களைப் பிடிக்க முடியாது

  * ஸ்பெயின்:சாம்பியன் மட்டுமே எங்கள் இதயத்துடிப்பு

  * ஸ்விட்சர்லாந்து: இறுதி நிறுத்தம்; 07-13-14 மரகனா (இறுதிச் சுற்று மைதானம்)!

  * உருகுவே: 30 லட்சம் மக்களின் கனவு.... நிறைவேற்று உருகுவே

  * அமெரிக்கா: அணியாக இணைந்து ஆர்வத்துடன் வழிநடத்து.

  kattana sevai