சுடச்சுட

  
  BOUCH1

  மகளிர் டென்னிஸில் புதிய நட்சத்திரமாக ஒளிர்ந்து வரும் 20 வயதான கனடாவின் பெüசார்டு, பிரெஞ்சு ஓபனின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  இத்தொடரில், தற்போது களத்தில் உள்ள மிக இளம் வீராங்கனûயான இவர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3ஆம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பருடன் மோதினார்.

  தரவரிசை என பார்க்கும்போது, கெர்பர் 8-ம் இடத்தில் உள்ளார். அவரைவிட 10 இடங்கள் பின்தங்கி உள்ளார் பெளசார்டு.

  ஆனால், கெர்பருக்கு சிறிதும் கருணை காட்டாத பெüசார்டு, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  2 ஆண்டுகளுக்கு முன்புதான், விம்பிள்டன் ஜூனியர் பட்டத்தை பெளசார்டு கைப்பற்றினார். தற்போது கிராண்ட்ஸ்லாம் தொடரில் முன்னணி வீராங்கனைகளுக்கு சவால் அளித்து வருகிறார்.

  இது குறித்து கூறுகையில், "18 வயதுக்கு முன்பே, அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டேன். அப்போது பல்வேறு நெருக்கடியை சந்தித்துள்ளேன். அந்த அனுபவம் தற்போது உதவி வருகிறது. 20 வயதுதான் என்றாலும், நான் அதிக வயதாகி விட்டதாகக் கருதுகிறேன். அதனால், டென்னிஸ் பாதையில் "சிறந்த வீராங்கனை' என்று பெயரை விரைவிலேயே எடுக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

  4ஆம் சுற்றில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் செளரஸ் நவர்ரோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் அஜ்லா டால்ஜானோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில், பெüசார்டுடன் இவர் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

  பெர்டிச்: ஆடவர் பிரிவில் நடைபெற்ற 4ஆம் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை வீழ்த்தி முதல் வீரராக காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் லத்வியாவின் எர்னஸ்ட் குல்பிஸ் 6-7, 7-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 17 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு, பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன் ஃபெடரர் வெளியேறுவது இதுவே முதன் முறையாகும்.

  சனிக்கிழமை இரவு நடைபெற்ற 3ஆம் சுற்று ஆட்டங்களில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், ஃபிரான்ஸின் ரிச்சார்டு கேஸ்கேயும் வெற்றி பெற்று 4-ம் சுற்றுக்கு முன்னேறினர்.

  காலிறுதியில் சானியா-பிளாக் ஜோடி

  மகளிர் இரட்டையர் பிரிவு 3ஆம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் ஜான்கோவிச், ரஷியாவின் க்ளைனோபாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

  சானியா ஜோடி, தங்களது காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேயின் சு-வெய், சீனாவின் ஷுவாய் பெங் ஜோடியை எதிர்கொள்கிறது. அதேபோல், இத்தாலியின் சாரா எர்ராணி, ராபர்டா வின்சி ஜோடியும் காலிறுதியை எட்டியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai