சுடச்சுட

  

  ஏழாவது ஐபிஎல் போட்டியின் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி 199 ரன்களைக் குவித்தது.

  பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

  இதையடுத்து பேட் செய்த பஞ்சாபுக்கு,  ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

  இரண்டாவது தகுதிச்சுற்றில் சதம் அடித்து தோனியின் சென்னை அணியை தொடரிலிருந்து வெளியேற்றிய சேவாக், இம்முறை 7 ரன்களிலும், சரிவைத் தடுக்கும் முயற்சியில் முன்னதாகவே பேட் செய்ய வந்த கேப்டன் பெய்லி 1 ரன்னிலும் பெவிலியன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

  தொடரில் கடைசிவரை அதிரடியாக விளையாடிய பஞ்சாபுக்கு, இறுதிச்சுற்றில் பின்னடைவு ஏற்படுமா என்ற ரசிகர்களின் எண்ணத்துக்கு மனன் வோராவும், ரித்திமான் சாஹாவும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

  நிதானத்துடன் விளையாடிய இந்த ஜோடி, ரன் ரேட் குறையாமல் பேட் செய்து நெருக்கடியைக் குறைத்துக் கொண்டது.

  3ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. வோரா, 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

  ஆனால், சாஹா தனது விக்கெட்டை அவ்வாறு விடவில்லை. தொடர்ந்து பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டிய வண்ணம் அவர் இருந்தார். இதனிடையே, இத்தொடரில் சிறந்த வீரராக உருவெடுத்துள்ள மேக்ஸ்வெல், கடைசி ஆட்டத்தில் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

  சாஹா சதம்: 29 பந்துகளில் அரை சதம் அடித்திருந்த சாஹா, தனது பேட்டை தொடர்ந்து சுழற்றியதால், 49 பந்துகளில் சதம் அடித்து மட்டையை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்தது.

  இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 55 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இதில், 8 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.

  கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், யாதவ் மற்றும் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai