சுடச்சுட

    

    ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா: ஈடன் மைதானத்தில் இன்று வெற்றிக் கொண்டாட்டம்

    By dn  |   Published on : 03rd June 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழாவது ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டம், மேற்கு வங்கத்தில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

    2012ஆம் ஆண்டில் ஐபிஎல் கோப்பையை வென்றபோது, ஈடன் கார்டன் மைதானத்தில்தான் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த விழா போன்றே, செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவையும் நடத்த மாநில அரசும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கமும் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி கூறுகையில், "ஈடன் மைதானத்தின் கதவுகள் காலை முதல் மாலை வரை திறந்திருக்கும். அனுமதி இலவசம் என்பதால் அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.

    மம்தா பங்கேற்பு: செவ்வாய்க்கிழமை நடைபெறும் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி செய்தார்.

    முன்னதாக, ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கும், அதன் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் வாழ்த்துகளையும், ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்த பஞ்சாபின் ரித்திமான் சாஹாவுக்கு பாராட்டுகளையும் ஃபேஸ்புக்கில் மம்தா பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பந்து வீச்சாளர்களே வெற்றிக்குக் காரணம்:  ஏழாவது ஐபிஎல் ஏலத்தின்போது திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்ததே, இரண்டாவது முறையாக நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம் என்று கொல்கத்தா அணியின் கம்பீர் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "ஏலத்துக்கு நாங்கள் சென்றபோது, சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை உருவாக்க வேண்டும் என்று இலக்கு வைத்தோம். டி20 போட்டிக்கு, நட்சத்திர  பேட்ஸ்மேன்கள்தான்தேவை என அணிகள் பலவும் எண்ணியிருந்தன. தாக்குதல் பந்து வீச்சானது, எத்தகைய பேட்ஸ்மேன் வரிசைக்கும் நெருக்கடியைத் தரும். அதேசமயம், நாங்கள் சிறப்பாகவும் பேட் செய்தோம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai