சுடச்சுட

    

    சர்வதேச மல்யுத்தம்: யோகேஷ்வர், சுஷீல் குமாருக்கு பதக்கம்

    By dn  |   Published on : 03rd June 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத், தங்கப் பதக்கத்தையும், சுஷீல் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

    லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின், இருவரும் கலந்து கொண்ட சர்வதேச அளவிலான இப்போட்டியில் மீண்டும் பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய எடைப் பிரிவின் கீழ் போட்டியில் கலந்து கொண்டு இருவரும் பதக்கம் பெற்றது கூடுதல் சிறப்பாகும்.

    சிஸ்செரி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் யோகேஷ்வர் தத் 65 கிலோ எடைப் பிரிவிலும், சுஷீல் குமார் 74 கிலோ எடைப் பிரிவிலும் கலந்து கொண்டனர். கிளாஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் 50 நாள்கள் மட்டும் உள்ளன. இந்நிலையில் சர்வதேச அளவிலான போட்டியில் இருவரும் சாதித்திருப்பது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai