சுடச்சுட

  
  captain

  ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

  திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களை விட இங்கிலாந்து வீரர்கள் இரு மடங்கு அதிக ஆற்றலுடன் விளங்கினர்.

  ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியும் தலா 1 கோல் அடித்து சமநிலை எட்டியிருந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் க்ளெகோர்னும், இந்தியத் தரப்பில் தரமவீர் சிங்கும் கோல் அடித்தனர்.

  ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் சைமன் மன்டெல் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

  இத்தொடரில் இந்தியா விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் கூறுகையில், "இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். உண்மை என்னவெனில், 2 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியபோதும், புள்ளிகள் ஏதும் பெறாததுதான். பெல்ஜியம், இங்கிலாந்து இரு அணிகளும் எங்களை விட தரவரிசையில் முன்னணியில் உள்ளன. இரு அணிகளுக்கு எதிராகவும், வெற்றிக்கு அருகில் சென்றே நாங்கள் தோற்றோம்' என்று தெரிவித்தார்.

  வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய வீரர்கள்
  ஹாக்கியில் பெனால்டி கார்னர் கிடைப்பது கோல் அடிப்பதற்கான அருமையான வாய்ப்பாகும். ஆனால், அந்த வாய்ப்புகளை இந்தியா தவற விட்டதே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

  இந்தியாவுக்கு கிடைக்க 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் வீரர்கள் கோலாக மாற்றத் தவறினர். அதேசமயம், இங்கிலாந்துக்கு கிடைத்த 4 வாய்ப்புகளில் இரண்டினை அவர்கள் கோலாக மாற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai