சுடச்சுட

  
  sharuk

  ஏழாவது ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தா கலந்து கொண்டார். வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் என்பதால், மைதானத்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தனர். இதனால் மைதானத்துக்கு வெளியே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய தடியடியில் 5 பேர் காயமடைந்தனர்.

  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அணி வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தங்க மோதிரத்தை கொல்கத்தா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா வெற்றிப் பரிசாக அளித்தார். மாநிலத்தின் சார்பில் வீரர்களுக்கு அல்போன்சா மாம்பழம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai