சுடச்சுட

  

  உலகக் கோப்பை ஹாக்கி: ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?

  By dn  |   Published on : 05th June 2014 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hockey

  பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியடைந்த இந்திய அணி வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

  நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் வெற்றியை பறிகொடுத்தது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் கடைசி நிமிடங்களில்தான் வெற்றி வாய்ப்பு நழுவியது. எனவே, ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தவறுகளைத் திருத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

  இரு அணிகளும் இதற்கு முன் 2013-ம் ஆண்டு உலக லீக் போட்டியின் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. அப்போது "பெனால்டி ஷூட்' முறையில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பின்களம் பலவீனமாக இருந்ததே அதற்கு காரணம். அதே நிலைமைதான் தற்போதும் தொடருகிறது. குறிப்பாக சான்டி ஃபெரிக்ஸியா, எடுவர்ட் டுபு இந்தியா அணியின் பின்கள வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பர் எனத் தெரிகிறது.

  இந்திய அணியின் தொழில்நுட்ப இயக்குநர் ரோலன்ட் ஓஸ்ட்மன்ஸ் கூறுகையில் ""சமீபத்தில் ஸ்பெயினுக்கு எதிராக நாங்கள் ஆடவில்லை. அந்த அணியில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். கடந்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் வீரர்களின் செயல்பாட்டில் திருப்தியே' என்றார்.

  ஸ்பெயின் அணி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இங்கிலாந்துடனான ஆட்டத்தை 1-1 என டிரா செய்தது.

  அந்த அணியின் பயிற்சியாளர் சால்வேடார் இந்துரைன் கூறுகையில் "ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதி ஆட்டமாக நினைத்து ஆடுவோம். இந்தியா எங்களை விட தரவரிசையில் முன்னேறி உள்ளது. எனவே அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. இந்தியர்கள் எப்படி ஆடுவர் எனத் தெரியும். அவர்கள் பல விதங்களில் முன்னேறியுள்ளனர். அணியில் மூத்த வீரர்கள் இருந்தபோதிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல நாங்கள் வலுவாக இல்லை. இருப்பினும், எங்கள் அரையிறுதி கனவு முடிந்துவிடவில்லை' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai