சுடச்சுட

  

  பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வரும் ஆர்ஜெண்டினாவின் முன்கள வீரர் மெஸ்ஸி, உலகின் விலையுயர்ந்த வீரராகத் திகழ்வதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சி.ஐ.இ.எஸ். கால்பந்து கண்காணிப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற மெஸ்ஸியின் மார்க்கெட் மதிப்பு 294 மில்லியன் டாலர். உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோவின் மார்க்கெட் மதிப்பு 114 மில்லியன் யூரோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரொனால்டோ(29), மெஸ்ஸி(27) இருவருக்கும் இடையிலான மார்க்கெட் மதிப்பு வித்தியாசத்துக்கு அவர்களது வயது வித்தியாசமே காரணம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai