சுடச்சுட

  

  ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை வெளியிட்டது. இதில் இந்தியா 3-வது இடத்துக்குப் பின்தங்கியது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை 3-2 என இலங்கை வென்றிருந்தது. இதன்மூலம் இந்தியாவும், இலங்கையும் ஒரே அளவு (112) தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றிருந்தது. இருப்பினும், தசம புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

  ஆனால், வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தோனி 6-வது இடத்திலும், ஷிகர் தவன் 8-வது இடத்திலும், ரோஹித் 20-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai