சுடச்சுட

    
    ho_hockey

    உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் சர்தார் சிங் தெரிவித்துள்ளார்.

    பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடிது. 2 ஆட்டங்களிலும் கடைசி நிமிடத்திலேயே எதிரணிக்கு வெற்றியை இந்திய வீரர்கள் தாரை வார்த்தனர்.

    எனினும், தரவரிசையில் முன்னணியில் இரு அணிகளுக்கும் எதிராக இந்திய அணியின் செயல்பாடு பாராட்டத் தகுந்தது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிப் புள்ளிக் கணக்கை தொடங்கி விட வேண்டும் என்று இந்திய அணியினர் செவ்வாய்க்கிழமை கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து சர்தார் சிங் கூறுகையில், "கடந்த 2 ஆட்டங்களிலும் கடைசிக் கட்டத்தில்தான் எங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இது, பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது' என்றார்.

    "ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்கள் உறுதி கொண்டுள்ளனர்' என்று டெர்ரி வால்ஷ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai