சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக ஆம்லா நியமனம்

    By dn  |   Published on : 04th June 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஹசிம் ஆம்லா நியமிக்கப்பட்டார்.

    10 ஆண்டுகளுக்கும் மேலாக தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த கிரேம் ஸ்மித், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி சில மாதங்களாக இருந்து வந்தது. டிவில்லியர்ஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஆம்லாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கேப்டனாக செவ்வாய்க்கிழமை நியமித்தது.

    இது குறித்து ஆம்லா கூறுகையில், "பேட்டிங்குடன் தற்போது அணியை வழிநடத்தும் பொறுப்பும் எனக்கு வந்துள்ளது' என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai