சுடச்சுட

  
  harbajan

  சிறந்த ஃபார்மில் உள்ளபோதும், தொடர்ந்து தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்படுவது காயப்படுத்துவதாக உள்ளது என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

  நிராகரிக்கப்படுவது ஏமாற்றம் என்றாலும், மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அணிக்குத் தேர்வு செய்யப்படுவதில் நான் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். அது, வருத்தத்தையே அளிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் எனது ஆட்டத்திறனை அனைவரும் பார்த்திருப்பர். இந்திய அளவிலான சுழற்பந்து வீச்சாளர்களில் நான் சிறப்பாக பந்து வீசுகிறேன் என்று நம்புகிறேன். எனக்கு இன்னும் வயது உள்ளது. அதனால், இந்திய அணியில் மீண்டும் விளையாட முடியும் என்று நம்புகிறேன். ஒரு பேட்ஸ்மேன் எனது பந்தில் எப்படி விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அவ்வாறு பந்து வீசி அவரை விளையாட வைப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது' என்று ஹர்பஜன் தெரிவித்தார்.

  ஏழாவது ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய ஹர்பஜன், 14 விக்கெட்டுகளை எடுத்தது

  குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai