சுடச்சுட

  

  பிரெஞ்சு ஓபன் காலிறுதி தோல்வியிலிருந்து தப்பினார் ஷரபோவா

  By dn  |   Published on : 04th June 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shara

  பிரெஞ்சு ஓபனின் 2ஆவது சுற்றில் செரீனாவை வீழ்த்திய ஸ்பெயினின் முகுருஸாவை காலிறுதியில் ரஷியாவின் மரியா ஷரபோவா வீழ்த்தினார்.

  இதன்மூலம், தொடர்ச்சியாக இத்தொடரின் அரையிறுதிக்கு 4ஆவது முறையாக ஷரபோவா முன்னேறினார்.

  பாரிஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஷரபோவா 1-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.

  இந்த ஆட்டத்தில் மிகவும் அமைதியுடன் விளையாடிய முகுருஸா, முதலாவது செட்டை 27 நிமிடத்தில் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  இதனால், 2ஆவது செட்டில் சுதாரித்து விளையாடிய ஷரபோவா, ஒரு கட்டத்தில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆனால், எவ்வித பதற்றத்தையும் முகபாவணையில் வெளிப்படுத்தாத முகுருஸா, 3-3 என்ற சமநிலையை எட்டினார்; தொடர்ந்து சிறப்பாக விளையாடி 5-4 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றார். இதனால், ஷரபோவாவின் சாம்பியன் கனவு தகர்ந்து விடும் என்றே கருதப்பட்டது.

  மிகவும் சோர்வாகக் காணப்பட்ட ஷரபோவா, தனது முதிர்ந்த அனுபவத்தைப் பயன்படுத்தி அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.

  தொடர்ந்து நடைபெற்ற 3ஆவது செட்டில், அதிர்ஷ்டம் ஷரபோவா பக்கம் இருந்ததால், அதனை 6-1 என்ற கணக்கில் வென்றார். 3ஆவது செட்டில் தனக்கு அதிர்ஷ்டம் இருந்ததை ஷரபோவாவும் ஒப்புக் கொண்டார்.

  முதல் வீராங்கனை: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பெüசார்டு, 7-6 (4), 2-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி ஸ்பெயினின் செüரஸ் நவர்ரோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனட வீராங்கனை பெüசார்டு என்பதால், ஆட்டத்தில் வெற்றி பெற்றவுடன் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

  20 வயதான பெüசார்டுக்கு, இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியாகும். இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் அவர், லீ நாவிடம் தோல்வியைத் தழுவினார்.

  அந்தத் தவறை, அனுபவமும் திறமையும் வாய்ந்த ஷரபோவாவிடம் இத்தொடரில் செய்ய மாட்டார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  யார் முன்னிலை: ஷரபோவாவும், பெüசார்டும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற மியாமி மற்றும் பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் முதல் சுற்றில் இருவரும் மோதினர். 2 ஆட்டங்களிலும் பெüசார்டு நேர் செட்களிலேயே தோற்கடிக்கப்பட்டார். ஆனால், இம்முறை அதிக பலத்துடன் பெüசார்டு காணப்படுகிறார். காலிறுதி ஆட்டத்தில் 3 செட் வரை போராடி வெற்றி பெற்றதால், பெüசார்டை மிகவும் கவனத்துடன் ஷரபோவா எதிர்கொள்வார்.

  சானியா ஜோடி தோல்வி

  மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தயாவின் சானியா மிர்ஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் சு-வெய், பெங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai