சுடச்சுட

  

  போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயத்தால் அவதிப்படுவதால் உலகக் கோப்பையில் அவரது பங்களிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

  ஜூன் 16-ம் தேதி பிரேசிலின் சால்வேடாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக போர்ச்சுகல் அணி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மெக்ஸிகோ, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டங்களில் பங்கேற்கிறது.

  இதற்காக நியூயார்க் ஜெட்ஸ் பயிற்சி மையத்தில் போர்ச்சுகல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சிக்குப் பின் போர்ச்சுகல் நிர்வாகம் விடுத்த மருத்து அறிக்கையில் "ரொனால்டோ இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரவுல் மீர்லெஸ், பெபே, பெடோ ஆகியோரும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai