சுடச்சுட

  
  commonwealth

  காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் ரவிக்குமார் உள்பட பளுதூக்கும் வீரர்கள் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஜூலை 23-ம் தேதியில் இருந்து காமன்வெல்த் போட்டியும், தென்கொரியாவின் இன்சியான் நகரில் செப்டம்பர் 19-ம் தேதியில் இருந்து ஆசிய விளையாட்டுப் போட்டியும், ஆகஸ்ட் மாதம் சீனாவின் நஞ்சிங் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டியும் நடைபெறவுள்ளன.

  இதில் பங்கேற்கும் பளுதூக்கும் வீரர்கள் பஞ்சாபின் பாட்டியாலா நகரில் தேர்வு செய்யப்பட்டனர். காமன்வெல்த் போட்டிக்கு மொத்தம் 8 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 69 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற ரவிக்குமார் இடம்பெற்றுள்ளார். அவர் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவினருக்கான வரிசையில் இடம்பிடித்துள்ளார். அவருடன் சுகென் தே, கணேஷ் மாலி, ஓம்கர், சந்திரகாந்த் மாலி ஆகியோரும் வாய்ப்பு பெற்றனர்.

  ஆனால், மகளிர் பிரிவில் கடந்த முறை தங்கம் வென்ற ரேணு பாலா சானு உள்பட முன்னணி வீராங்கனைகளில் யாரும் மீண்டும் வாய்ப்பு பெறவில்லை. ஊக்க மருந்து சோதனைக்குப் பின் தேர்வான வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai