சுடச்சுட

    

    இளம் தலைமுறை கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் விதமாக மேற்கு வங்கத்தில் அரசு நிதி உதவியின் கீழ் கால்பந்து அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று அரசு சார்பில் அகாதெமிகள் தொடங்கப்படவில்லை. இந்த தகவலை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மதன் மித்ரா உறுதிப்படுத்தினார்.

    13 முதல் 15 வயதுக்குட்பட்ட 14 இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த அகாதெமியில் தங்கி இருப்பர். அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்காக கர்தகா மைதானத்தை ரூ.10 கோடியில் புனரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அகாதெமி திறப்பு விழாவில் அருண் கோஷ், சுனி கோஸ்வமி உள்ளிட்ட முன்னாள் கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai