சுடச்சுட

    

    பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் கனடாவின் பெüசார்டை வீழ்த்திய ரஷியாவின் மரியா ஷரபோவா தொடர்ந்து 3-வது முறையாகவும், ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலேப் முதன்முறையாகவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    பாரிஸில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஷரபோவாவும், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள பெüசார்டும் மோதினர். முன்னணி வீரங்கனையான ஷரபோவாவுக்கு பெüசார்டு கடும் சவால் அளித்தார். 44 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டில் 6-4 என பெüசார்டு வெற்றி பெற்றார்.

    2-வது செட்டில் தனது தவறுகளைத் திருத்திக் கொண்ட ஷரபோவா எழுச்சியுடன் ஆடினார். இந்த செட் ஒரு மணி நேரம் நீண்டது. இறுதியில் 7-5 என அந்த செட்டை ஷரபோவா தன்வசப்படுத்தினார்.

    3-வது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் முதல் 3 கேம்களை ஷரபோவா கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் இருந்தார். அதே நம்பிக்கையுடன் ஆடிய அவர் மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

    வளர்ந்து வரும் நட்சத்திர வீராங்கனையான பெüசார்டு இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறி தோல்வியைத் தழுவியுள்ளார். இருப்பினும், தோற்பதற்கு முன் ஷரபோவாவுக்கு அவர் கடும் சவால் அளித்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

    ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல காத்திருக்கும் ஷரபோவா வெற்றிக்குப் பின் கூறுகையில் "பெüசார்டு அசாதாரணமாக ஆடினார். அவரது ஆட்டத்திறன் மேலோங்கி இருந்தது. நான் வெற்றி பெற்றது அதிர்ஷ்டமே. முதலிரண்டு செட்களில் வெற்றிபெற வேண்டும் என நினைத்தேன். ஆனால், அவர் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியதால் முதல் செட் பறிபோனது. முதல் செட்டை இழந்தது கடினமான விஷயம். இருப்பினும், அதிலிருந்து மீண்டு வந்தேன்' என்றார்.

    ஹாலேப் வெற்றி: இரண்டாவது அரையிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலேப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்ட்ரியா பெட்கோவிச்சும் மோதினர். இதில் 6-2 7-6(4) என்ற செட் கணக்கில் ஹாலேப் வெற்றி பெற்றார். இதன் மூலம் ருமேனியாவில் இருந்து பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

    அரையிறுதியில் நடால் - முர்ரே மோதல்:

    புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஃபேல் நடாலும், ஸ்பெயினைச் சேர்ந்த டேவிட் ஃபெரரும் மோதினர். முதல் செட்டை 4-6 என ஃபெரர் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்த நடால் அடுத்தடுத்த செட்களை 6-4, 6-0, 6-1 என வென்றார். இதன் மூலம் 9-வது முறையாக நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் முர்ரேவும், மோன்ஃபில்ஸýம் மோதினர். ஐந்து செட் வரை நீண்ட இந்த ஆட்டத்தில் 6-4, 6-1, 4-6, 1-6, 6-0 என முர்ரே வெற்றி பெற்றார். இதனால் விம்பிள்டன் சாம்பியனான ஆண்டி முர்ரே அரையிறுதியில், எட்டு முறை பிரெஞ்சு ஓபன் வென்றுள்ள நடாலை எதிர்கொள்கிறார்.

    இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் மோதினர். அதில் நடால் வெற்றி பெற்றார். தவிர, களிமண் தரையில் நடாலை முர்ரே வீழ்த்தியதே இல்லை. எனவே, இந்த முறையும் நடால் இறுதிச் சுற்றுக்கு வெற்றிநடை போட வாய்ப்புள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai