சுடச்சுட

  

  போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடதுகாலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படுகிறார். எனவே, அவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்தது. போர்ச்சுகல் அணி குரூப் ஜி பிரிவில் வலுவான அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. ரொனால்டோ ஆடாத பட்சத்தில் போர்ச்சுகலுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், அவரது வருகை குறித்து அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் வியாழக்கிழமை அவர் நியூயார்க் ஜெட்ஸ் மைதானத்தில் சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். முன்னதாக ரொனால்டோவும் காயத்தால் அவதிப்படும் மற்றொரு வீரர் ரவுல் மெயிர்லெஸýம் சிகிச்சை மற்றும் பிரத்யேக உடற்பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

  அநேகமாக முதல் ஆட்டத்துக்கு முன் மெக்ஸிகோ மற்றும் அயர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் ரொனால்டோ ஆடுவது சந்தேகமே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai