சுடச்சுட

  

  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. 2006-ம் ஆண்டுக்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து இந்திய அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியது:

  இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளோம். டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் அடித்துள்ளேன். அனுபவ வீரர் என்றாலும் எட்டு ஆண்டுகளுக்குப் பின் ஆட இருப்பதால் போட்டிக்கு தயாராக வேண்டும். மகளிர் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. மகளிருக்கும் அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்த பிசிசிஐ முயற்சிக்கும் என நம்பிக்கை உள்ளது என்று மிதாலி ராஜ் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai