சுடச்சுட

  

  இந்தியாவில் ஆசியப் போட்டி: இன்னும் விவாதம் நடக்கவில்லை

  By dn  |   Published on : 07th June 2014 11:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2019-இல் இந்தியாவில் ஆசியப் போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ) தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

  ஆசியப் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இருந்து வியத்நாம் விலகியதை அடுத்து கடந்த மாதம் ஐஓஏ செயலாளர் ராஜீவ் மேதா கூறுகையில் "ஆசியப் போட்டிகளை இந்தியா நடத்த விரும்புகிறது. இதுகுறித்து அடுத்த மாதம் ஐஓஏ பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

  ஆனால், ஐஓஏ தலைவர் தற்போது இதை மறுத்துள்ளார். ராமச்சந்திரன் கூறுகையில் "ஐஓஏ இதுகுறித்து இன்னும் விவாதிக்கவில்லை. எனவே இதைப் பற்றி நான் விவாதிப்பது நியாயமற்றது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai