சுடச்சுட

  

  இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கான மேலாளராக தில்லி மற்றும் மாவட்டங்கள் கிரிக்கெட் சங்க செயலாளர் சுனில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  இவர் இதற்கு முன் இரண்டு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது மேலாளராக பணியாற்றியுள்ளார். 1996-97 தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம், 2007-இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இவர் இந்திய அணியை வழிநடத்திச் சென்றார்.

  இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஜூன் 26-ம் தேதி முதல் பயிற்சி ஆட்டத்திலும், ஜூலை 9-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவுள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி ஒருநாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai