சுடச்சுட

    
    hockey

    உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.

    நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதலிரண்டு ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஸ்பெயினுக்கு எதிரான 3-வது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.

    மலேசிய அணி 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் இந்தியாவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முன்னேற முயற்சிக்கும். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால், மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று முழுமையான புள்ளிகளைப் பெற சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி முயற்சிக்கும். ஆனால், கடந்த காலங்களில் மலேசியாவே ஆதிக்கம் செலுத்தி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

    இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் கூறுகையில் ""பலவீனமான பகுதிகளில் தற்போது மேம்பட்டுள்ளோம். சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அணியின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. மலேசியாவை எளிதில் வீழ்த்த முடியாது. இருப்பினும் எங்கள் யுக்திகள் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கும்' என்றார்.

    கேப்டன் சர்தார் சிங் கூறுகையில் "ஒவ்வொரு ஆட்டத்திலும் கற்றுக் கொண்டும், எங்களை மேம்படுத்திக் கொண்டும் வருகிறோம்.

    எங்கள் பலம், பலவீனத்தை நன்கு அறிந்து வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறோம். எங்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நிச்சயம் மலேசியாவை வீழ்த்தி முன்னேறுவோம்' என்றார்.

     

    ரிது ராணி கேப்டன்: காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளுக்கு தயாராகும் விதமாக மலேசியாவில் ஹாக்கிபோட்டி நடைபெறவுள்ளது. ஜூன் 7 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 21-பேர் கொண்ட அணிக்கு நடுகள வீராங்கனையான ரிது ராணி கேப்டனாக செயல்படவுள்ளார். தீபிகா துணை கேப்டனாக தேர்வாகியுள்ளார்.

     

     

    உலகக் கோப்பையில் நாம் முழுவதுவமாக தோல்வியடைந்துள்ளோம். ரோலன்ட் ஓல்ட்மன்ஸ் (தொழில்நுட்ப இயக்குநர்) மற்றும் டெர்ரி வால்ஷ் (பயிற்சியாளர்) எட்டு மாதமாக அணியில் இணைந்திருந்தனர். ஆனால், அவர்கள் சேவை பலனளிக்கவில்லை. இப்போது நாம் பெல்ஜியத்திடம் எல்லாம் தோல்வியடைகிறோம். ஒரு இந்தியர் பயிற்சியாளராக இருந்தால் எப்படி ஊக்குவிப்பது, எப்படி யூகம் அமைப்பது என அவருக்கு தெரிந்திருக்கும். நாம் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடைசி நிமிடத்தில் தோற்று விட்டோம். புள்ளிகளைப் பெற்றது அதிர்ஷ்டம் என பயிற்சியாளர் சொல்கிறார். அவர் இப்படிச் சொல்வது நல்ல மனநிலை அல்ல.

    தன்ராஜ் பிள்ளை, ஹாக்கி முன்னாள் கேப்டன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai