சுடச்சுட

  

  மூன்று நிமிட இடைவெளியில் ஆகாஷ்தீப் சிங் இரண்டு கோல்கள் அடித்து உதவ மலேசியாவுக்கு எதிரான உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

  நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மலேசியாவும் மோதின. இதற்கு முந்தைய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மலேசியாவை, இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே இந்தியா வெற்றிபெற்று, இப்போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். பெரும்பாலான நேரம் மலேசிய கோல் எல்லையில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், பெனால்டி கார்னர் உள்பட கோலடிக்கும் வாய்ப்புகளை வீணடித்தனர். குறிப்பாக முதல்பாதியில் இந்திய அணிக்கு 4 பெனால்டி கார்னர் கிடைத்தன. இவை எதுவுமே கோலாக மாறவில்லை.

  ஒருவழியாக ஆகாஷ்தீப் சிங் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அடுத்த 2 நிமிடத்தில் மீண்டும் அவர் கேப்டன் சர்தார் சிங் கொடுத்த பாûஸ கோலாக மாற்றினார்.

  61-வது நிமிடத்தில் மலேசியாவின் முகமது ரஸி ஒரு கோல் அடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். பின் அந்த அணி ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றியது.

  முடிவில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai