சுடச்சுட

  

  நடாலை சமாளிப்பாரா ஜோகோவிச்? இன்று பரபரப்பான இறுதிச் சுற்று

  By dn  |   Published on : 08th June 2014 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள நடாலும், ஜோகோவிச்சும் மோதவுள்ளனர்.

  எட்டு முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற நடாலும், முதன்முறையாக களிமண் தரையில் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முனைப்பில் உள்ள ஜோகோவிச்சும் மோதும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

  இந்த போட்டி தொடங்கும் முன், நிலையில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் நடால். ஆனால், தன் பிரத்யேக களத்தில் கால் பதித்தது முதலே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். பிரெஞ்சு ஓபனில் 66 வெற்றிகளை (1தோல்வி) குவித்துள்ள நடால், இம்முறை பட்டம் வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெறுவார்.

  ஆனால், கடைசியாக இருவரும் மோதிய ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் ஜோகோவிச், நடாலுக்கு கடும் சவால் அளிப்பார். இதை நடாலும் ஒப்புக் கொண்டுள்ளார்.

  நடால் கூறுகையில் "ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதில் ஆச்சரியம் இல்லை. அவர் முதன்முறையாக பிரெஞ்சு ஓபனை வெல்லும் உற்சாகத்தில் இருப்பார் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் முதல் பட்டம் வெல்லும் நெருக்கடியும் அவருக்கு இருக்கும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai