சுடச்சுட

  
  cup

  கால்பந்து ஆட்டத்துக்கு முன்பு, கால்பந்தை உதைப்பது நல்லது' என்ற நம்பிக்கை கால்பந்து வீரர்கள் மத்தியில் நிலவுகிறது. போட்டிக்கு முன்பு பயிற்சி வேண்டும் என்பதற்காக இது கூறப்பட்டதா அல்லது பந்தை உதைத்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று மூடநம்பிக்கையில் கூறப்பட்டதா எனத் தெரியவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. ஒவ்வொரு நாட்டு வீரர்கள் மத்தியிலும் இதுபோல பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. தங்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், ஏதோ ஒன்று தன்னை முன்னோக்கிக் கொண்டு செல்வதாக வீரர்கள் நம்புகின்றனர். இல்லையெனில், கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் ஆர்ஜெண்டினாவின் மரடோனாவே தனது கையில் பட்டு பந்து வலைக்குள் சென்றதை, "அது கடவுளின் கை' என்று தெரிவித்திருப்பாரா என்ன.

  கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பால் என பெயர் சூட்டப்பட்டிருந்த ஆக்டோபஸ், அணிகளின் வெற்றி தோல்விகளை துல்லியமாகக் கணித்தது நம் நினைவை விட்டு நீங்காது. கணிப்பு சாதகமாக இருந்தபோது அதை வரவேற்ற ரசிகர்கள், எதிராக இருந்தபோது அதனை சமைத்து சாப்பிட வேண்டும் என்று கோபத்துடன் கூறியதும் நமது நினைவில் நிழலாடத்தான் செய்கிறது.

  மனிதன் செய்த காரியத்துக்கு ஆக்டோபஸ் என்ன செய்யும் என்று ஓர் அறிவு அதிகமுள்ள மனித இனம் உணரவில்லை. அதுசரி. எந்த நாடாக, மதமாக இருந்தால்தான் என்ன. எல்லாவிடத்திலும் ஏதேனும் ஓர் அவநம்பிக்கை நிலவத்தானே செய்கிறது.

  ஆக்டோபஸýக்கு இணையாக வேறு உயிரினங்களும் அறிமுகப்படுத்தப்படாமல் இல்லை. ஆனால், அவைகளின் கணிப்பு அவ்வளவாக துல்லியமில்லை.

  குரங்கு, முள்ளம் பன்றி, பன்றி, இறால் ஆகிய உயிரினங்களும் இந்த ஜோசிய விளையாட்டில் களமிறக்கப்பட்டன. பாவம், அவைகளுக்கு ஆக்டோபஸ் அளவுக்கு கணிப்பு சக்தி இல்லை. அதனால், அவைகள் பெரிதும் பேசப்படவில்லை. சரி, ஆக்டோபஸýக்கு அடுத்தது எது என்ற புதிர் நீடித்து வருகிறது. அதுவும் உலகக் கோப்பை வேறு நெருங்கி விட்டதல்லவா?.

  அடுத்து எதை அறிமுகப்படுத்தினாலும் அதன் கணிப்பு நூறு சதவீதம் இல்லையென்றாலும் 90 சதவீதத்துக்கும் மேலாவது சரியாக இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்துபவர்கள் கருதுகின்றனர். அதனால், தற்போதிலிருந்து அந்த உயிரினத்துக்கு வல்லுநர்கள் (?) பயிற்சி அளித்து வருகின்றனர்.

  இந்த உலகக் கோப்பை ஆட்டங்களை கணிப்பதற்காக, தற்போது நெல்லி எனும் யானையை ஜெர்மனியில் தயார் செய்து வருகின்றனர். ஆக்டோபஸýம் ஜெர்மனியில் உதயமானதுதான்.

  இந்த நெல்லி யானைக்கு கணிப்பு புதிதல்ல. ஏற்கெனவே, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் உலகக் கோப்பை, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆகிய கால்பந்து தொடர்களில் சரியாகக் கணித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதில், 33 ஆட்டங்களில் 30இல் நெல்லியின் கணிப்பு கச்சிதமாக நிறைவேறியது. அதனால்தான் தற்போது நெல்லி குறித்த செய்திகள் ஊடகங்களில் தவழ்ந்து வருகின்றன.

  யானை நெல்லியை விடுவோம். ஜெர்மனிக்காரர்களுக்கு போட்டியாக சீனாவும் குதித்துள்ளதே. நெல்லிக்கு இணையாக, பாண்டா கரடியை களத்தில் தள்ளவிட சீனாவின் சிஷுவான் மாகாணத்தில் உள்ள உயிரினங்கள் பாதுகாப்பு மையத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

  இதற்காக பாண்டாவுக்கு அழைப்பு விடுத்து விட்டார்களாம். ஆனால், பாண்டா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லையாம்.

  கணிப்பு வேளைக்கு, ஒருவேளை பாண்டா சம்மதித்தால், அதற்கு பிடித்த உணவை நாடுகளின் கொடிகளின் வடிவில் வடிவமைத்து கணிக்கலாமா அல்லது பாண்டா ஏறும் மரங்களில் நாடுகளின் கொடிகளைக் கட்டி விட்டு கணிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

  பால் ஆக்டோபஸ், சீட்டா யானை ஆகியவற்றின் கணிப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்தனராம். அதுபோலவே சீனாவும் கருதுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் சீனா இல்லை என்பது வேறு விஷயம்.

  எப்படியோ துல்லியமாகக் கணித்த ஆக்டோபஸ், அதன் பிறகு விரைவிலேயே உயிரிழந்து விட்டது. தற்போது அடுத்த உயிரினத்துக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது மனித இனம். சரியாகக் கணித்தால் ஆக்டோபûஸப் போல ஒருவேளை நீயும் விரைவில் உயிரிழக்க நேரிடலாம் என்ற அவநம்பிக்கையை புதிதாக வரப்போகும் மிருகத்துக்கு யார் சொல்லப் போவது?

   

  எண்களிலும் மனிதக் கண்கள்...

   

  உயிரினங்களின் கணிப்பு போதாது என்று எண்களும் ராசியாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சில எண்கள் ராசியில்லை. அமெரிக்கர்களுக்கு 13ஆம் நம்பர் ஆகாததால், பல மாடிகளில் 13ஆவது ஃப்ளோர் இருக்காதாம். ஜப்பானியருக்கு 4-ம், 9-ம் எண்கள் வேண்டவே வேண்டாமாம். இரு எண்களை உச்சரிக்கும்போது மரணத்தையும், நோயின்மையும் தருவதாக அவர்கள் உணர்கின்றனராம்.

  ஒரு சில அணிகளுக்கு, தங்கள் நாட்டிலிருந்து தொலைவில் உள்ள அணிகளுடன் மோதினால் நல்ல சகுணமாம். சிலவற்றுக்கு பயிற்சி ஆட்டம் தடையுற்றால் கெட்ட சகுணமாம்.

  இத்தாலியர்களுக்கு 17ம் நம்பர் என்றால் பயங்கர அலர்ஜி. இந்த நம்பரின் ரோமன் வடிவம் ஷ்ஸ்ண்ண். இதனை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தால், மரணத்தை நோக்கி இருப்பதாக அர்த்தம் தருகிறது. அதனால், இத்தாலி விமானங்களில் 17ஆம் நம்பர் வரிசையையே தூக்கி விட்டார்கள். வீட்டு எண்களின் வரிசையிலும் அதே கதைதான். இத்தாலி அணி, கடந்த 30 ஆண்டுகளில் 17ஆம் தேதி மட்டும் 33 ஆட்டங்கள் விளையாடி, 30இல் தோற்றும் போனதாம். எதிர்வரும் 17ம் தேதி இத்தாலிக்கு போட்டி இல்லை

  என்பதால், பிரேசிலில் உள்ள அந்த அணி வீரர்கள் பெருமூச்சு விட்டுருப்பர்.

  ரஷியகாரர்களுக்கு இரட்டைப் படை எண்கள் கெட்ட சகுணமாகவும், ஒற்றைப் படை எண்கள் நல்ல சகுணமாகவும் உள்ளதாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai