சுடச்சுட

    

    உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் சா போலோ நகரில் சனிக்கிழமை போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இது உலகக் கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    சா போலா நகரில் வெள்ளிக்கிழமை மெட்ரோ ஸ்டேஷனில் ஏராளாமான சப்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதேபோல நகரின் மையத்தில் உள்ள சென்ட்ரல் வங்கி முன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினர். உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் நடைபெறும் இந்த போராட்டங்கள் கால்பந்து போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai