சுடச்சுட

  

  கோவையில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

  தமிழக வலுதூக்கும் சங்க ஆதரவுடன் கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

  ஆண்கள் பிரிவு (105 கிலோ):

  உத்தரப் பிரதேசத்தின் பிரதீப்குமார் யாதவ் முதலிடமும், தெலங்கானாவின் சையத் ரப்பான் குவாட்ரி இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் பிரதமேஷ் பவாஸ்கர் மூன்றாமிடமும் பெற்றனர்.

  120 கிலோ: கர்நாடகத்தின் அஷ்ரப் அலி முதலிடமும், தமிழகத்தின் யோகராஜ் இரண்டாமிடமும், கேரளத்தின் ஹரிநாராயணன் மூன்றாமிடமும் பெற்றனர்.

  120 கிலோவுக்கு மேற்பட்டோர்: தமிழகத்தின் அருண்ராஜா முதலிடமும், கேரளத்தின் அர்ஜூன் இரண்டாமிடமும், தமிழகத்தின் சுரேந்திரன் மூன்றாமிடமும் பிடித்தனர்.

  பெண்கள் பிரிவு (63 கிலோ):

  தமிழகத்தின் பிரியா முதலிடமும், அசாமின் உபாமா ராய் இரண்டாமிடமும், புதுச்சேரியின் புவனேஸ்வரி மூன்றாமிடமும் பெற்றனர்.

  72 கிலோ: தமிழகத்தின் கதீஜா பேகம் முதலிடமும், கேரளத்தின் சோனா இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் அன்ஜா சாவந்த் மூன்றாமிடமும் பெற்றனர்.

  84 கிலோ: தெலங்கானாவின் அனுஷா கெüட் முதலிடமும், மகாராஷ்டிரத்தின் நம்ரதா மகரே இரண்டாமிடமும், தமிழகத்தின் பொன்மணி மூன்றாமிடமும் பெற்றனர்.

  84 கிலோவுக்கு மேற்பட்டோர்: கேரளத்தின் நேகா மேத்யூ முதலிடமும், தமிழகத்தின் நந்தினி இரண்டாமிடமும், கேரளத்தின் ரெம்யா நாயர் மூன்றாமிடமும் பெற்றனர்.

  ஒட்டுமொத்த சாம்பியன்:

  தேசிய சப்-ஜூனியர் சாம்பியன் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்

  பட்டத்தைப் பெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai