சுடச்சுட

  
  sara

  முன்னணி வீராங்கனையான செரீனா முதலிலேயே வெளியேறியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஷியாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா, இறுதிச் சுற்றில் ஹாலேப்பை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார். களிமண் தரையில் ஷரபோவா வெல்லும் 2-வது பட்டம் இது. இதற்கு முன் 2012-இல் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஒட்டு மொத்தத்தில் ஷரபோவா வெல்லும் 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

  பாரிஸில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஷரபோவாவும், ருமேனியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனையான சிமோனா ஹாலேப்பும் மோதினர். இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே முன்னணி வீராங்கனைகளை தோற்கடித்து வந்த ஹாலேப் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

  இறுதிச் சுற்றிலும் அவர் ஷரபோவாவுக்கு கடும் சவால் அளித்தார். முதல் செட்டை ஷரபோவா எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் ஹாலேப் எழுச்சி பெற்றார். குறிப்பாக

  ஷரபோவாவின் சர்வ்களை பிரேக் செய்தார். டை பிரேக்கர் வரை நீடித்த இந்த செட்டை ஹாலேப் கைப்பற்றினார். இதனால், 3-வது செட் பரபரப்பை ஏற்படுத்தியது.

  2001-ம் ஆண்டுக்குப் பின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் முதன்முறையாக 3-வது செட் வரை நீண்டது. 3-வது செட்டில் அனுபவ வீராங்கனையான ஷரபோவா எழுச்சி பெற்றார். அதனால் அந்த செட் அவர் வசமானது.

  முடிவில் 6-4, 6-7(5/7), 6-4 என்ற செட் கணக்கில் ஷரபோவா வெற்றி வாகை சூடினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது. இளம் வீராங்கனை என்றபோதிலும் ஹாலேப் கடும் சவால் அளித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஹாலேப்புக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai