சுடச்சுட

  

  "ஆஸ்திரேலியாவை வெல்லும் சாத்தியம் இந்தியாவுக்கு உண்டு'

  By dn  |   Published on : 09th June 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆஸ்திரேலிய ஹாக்கி அணியை வெல்லும் சாத்தியம் இந்தியாவுக்கு உண்டு என்று இந்திய அணியின் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் கூறினார்.

  நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்ற 4 ஆட்டங்களில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

  இதுகுறித்து பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் கூறியதாவது: இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணி இளமையான வீரர்களை உள்ளடக்கியுள்ளது. வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது.

  இந்திய வீரர்கள் முழு நம்பிக்கையுடன் விளையாடி ஆஸ்திரேலியாவை வெல்லவேண்டும். பலம் வாய்ந்த எதிரணிகளுடன் மோதும்போது முழுத் திறனையும் வெளிப்படுத்தும்போது இந்திய அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கை கிடக்கும்.

  ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வேகமாக விளையாடி வெற்றியைத் தொட நாங்கள் விரும்பவில்லை. அதுபோன்ற ஆட்டத்தை விளையாடக்கூடாது என வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வெற்றிகளைப் பெறவேண்டும். அதற்காக வீரர்கள் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு புள்ளியையாவது வீரர்கள் பெற நினைக்கின்றனர்.

  ஆனால் நானோ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 புள்ளிகளைப் பெற விரும்புகிறேன். இதற்காக வீரர்கள் முயற்சிக்கவேண்டும்.

  ஆஸ்திரேலியாவை வெல்லும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொல்வேன். ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்லும் சாத்தியம் இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு எனது பதில் ஆம் என்பதுதான். அந்த சாத்தியம் இருக்கிறது. எனவே சுய நம்பிக்கையுடன் வீரர்கள் விளையாடினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai