சுடச்சுட

  

  கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 37-ஆவது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் துவங்குகிறது.

  இதுதொடர்பாக தமிழக ஹேண்ட்பால் சங்க செயலர் ஏ.சரவணன், கோவை மாவட்டச் செயலர் ஆல்பர்ட் பிரேம்குமார், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சி.சுரேஷ்குமார் ஆகியோர் கோவை செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

  தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கமும், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களும் இணைந்து 37-ஆவது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகளை நடத்துகின்றன. கோவையில் முதன் முறையாக குளிரூட்டப்பட்ட உள்விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நடக்க உள்ளன.

  போட்டிகளில் 28 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. இப் போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும். மொத்த அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் தேசிய அணயில் விளையாடுவர்.

  தொடக்க விழா: கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் வி.கே.ஜெயக்கொடி பங்கேற்கிறார். தெற்காசிய ஹேண்ட்பால் சங்கத் தலைவரும், போலீஸ் ஐ.ஜி.யுமான எம்.ராமசுப்பிரமணி முன்னிலை வகிக்கிறார். கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். வரும் 15-ஆம் தேதி வரை இப் போட்டிகள் நடக்க உள்ளன. 15-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பரிசு வழங்குகிறார். இந்திய ஹேண்ட்பால் சங்கத் தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.எம். பாலி, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டேன்லி மேத்யூ ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்கின்றனர். இந்திய ஹேண்ட்பால் அணியில் விளையாடிய சந்தியா, தமிழக அணிக்காக விளையாடுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai