சுடச்சுட

  
  sania

  டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரது டென்னிஸ் தரவரிசையில் இதுதான் அவர் பெற்ற அதிகபட்ச இடமாகும்.

  மகளிர் டென்னிஸ் சம்மேளனம்(டபிள்யூடிஏ) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி, ஷுவாய் பெங்க்-சுவேய் ஹியா ஜோடியிடம் தோல்வி கண்டது. ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறியதால் சானியாவுக்கு 430 புள்ளிகள் கிடைத்தன.

  இதைத் தொடர்ந்து தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இதுவே அவரது அதிகபட்ச இடமாகும்.

  இதுகுறித்து பர்மிங்ஹாமிலிருந்து செய்தி நிறுவனத்துக்கு சானியா அளித்த பேட்டி: தரவரிசையில் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் கடந்த ஜனவரியில் பயிற்சியைத் தொடங்கினேன். இப்போது பிரெஞ்சு ஓபன் கால் இறுதி வரை முன்னேறியதால் கிடைத்த புள்ளிகள் மூலம் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளேன். இதைத் தொடர்ந்து புல்தரை டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai