சுடச்சுட

  

  உலகக் கோப்பை ஹாக்கி: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா

  By dn  |   Published on : 09th June 2014 11:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hockey

  நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

  தி ஹேக் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா விளையாடியது. சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா 4-0 என்ற கோல்கள் கணக்கில் இந்தியாவை எளிதாக வீழ்த்தியது.

  ஆட்டம் தொடங்கிய 27-வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய வீரர் கீரன் கோவர்ஸ் கோலடித்தார். இதைத் தொடர்ந்து கிடைத்த 3 பெனல்டி கார்னர் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக கோலாக்கினர்.

  கிறிஸ் சிரியல்லோ 2 கோல்களையும், ஜெர்மி ஹேவர்ட் ஒரு கோலையும் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 4-0 என முன்னிலை பெற்றது. பின்னர் இறுதி வரை ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய வீரர்களின் கோல் முயற்சியைத் தடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர்களின் அருமையான ஆட்டத்தின்முன்பு இந்திய வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போய்விட்டது. இறுதியில் ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டு முதலிடம் பிடித்துள்ளது.

  இந்தியா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றது.

  ஸ்பெயின்-மலேசியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தின் போக்கைப் பொருத்து குரூப்பில் இந்தியா பெறும் இடம் தீர்மானிக்கப்படும்.

  ஸ்பெயின்-மலேசியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தாலோ அல்லது மலேசியா வெற்றி பெற்றாலோ இந்தியா 4-ஆம் இடம் பிடிக்கும்.

  இதைத் தொடர்ந்து ஏழாவது, எட்டாவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா விளையாடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai