சுடச்சுட

  
  logo

  உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா திங்கள்கிழமை மோதவுள்ளது.

  உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தியா பங்கேற்ற 4 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

  இந்த நிலையில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது.

  மலேசியாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

  இதுகுறித்து இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் கூறியதாவது: மலேசியாவுடன் நடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி கண்டுள்ளோம். இதன்மூலம் இந்திய வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆஸ்திரேலியாவை முழுத் திறனுடன் எதிர்கொள்ள வீரர்கள் தயாராகி விட்டனர் என்றார் அவர்.

  குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா 4 வெற்றிகளைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai