சுடச்சுட

  
  Sourav

  ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விசாரணைக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி இணைந்துள்ளார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்ட மோசடி தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான விசாரணைக் குழு இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் குழுவில் வழக்குரைஞர்கள் எல். நாகேஸ்வரராவ், நிலோய் தத்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.பி. மிஸ்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

  இந்த நிலையில் இந்தக் குழுவில் கூடுதல் உறுப்பினராக செளரவ் கங்குலி இணைந்துள்ளார். இதுகுறித்து நீதிபதி முத்கல் கூறியதாவது: ஐபிஎல் விசாரணைக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு செளரவ் கங்குலிக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். எங்களது அழைப்பை ஏற்று குழுவில் இணைவதாக தொலைபேசியில் கங்குலி உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் சந்தித்துப் பேசவுள்ளோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai