சுடச்சுட

  
  shara

  கடும் உழைப்புக்குப் பின்னர் கிடைத்த வெற்றி இது என்று ரஷிய டென்னிஸ் வீராங்கனையும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான மரியா ஷரபோவா கூறினார்.

  பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஷரபோவா 6-4, 6-7(5-7), 6-4 என்ற கணக்கில் ருமேனியாவின் சிமோனா ஹாலேப்பைத் தோற்கடித்தார். பிரெஞ்சு ஓபனில் இது மரியா ஷரபோவாவுக்கு 2-வது பட்டமாகும். இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை ஷரபோவா வென்றுள்ளார். இதன்மூலம் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸின் சாதனையை சமன் செய்துள்ளார் அவர்.

  இறுதி ஆட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

  இந்த நேரம் மிகவும் இனிமையான நேரம். எனக்கு மிகவும் பிடித்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2 முறை பட்டம் வெல்வது என்பது இனிமையான நேரம்தானே. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகளே இல்லை. இந்த நிலையை அடைவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கிறேன் என்பது உண்மை. வெறுமனே ஆடுகளத்துக்குச் சென்று வெற்றியைப் பெற்று விட முடியாது. மிகவும் கஷ்டப்பட்டால்தான் வெற்றிப்படியில் ஏற முடியும். செம்மண் தரையில் அவ்வளவாக பழக்கப்படாத நான் பின்னர் என்னைத் தயார் செய்து கொண்டேன். இந்தப் போட்டிக்காக நான் கடுமையாக உழைத்தேன். அதனால்தான் இந்த வெற்றி வசமாகியிருக்கிறது.

  2004-ல் விம்பிள்டனில் நான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றபோது எனக்கு வயது 17 தான். இப்போது பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் மொத்தம் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 5 தான். 10 ஆண்டுகளில் 5 பட்டங்களுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறேன். எனக்காக மைதானத்தில் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai